search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே முறைகேடு"

    13,000 ஊழியர்கள் விடுமுறை எடுத்த நிலையில் ரெயில்வே சம்பள பட்டியல் தயாரித்து ரூ.1½ கோடி அலவன்ஸ் மோசடி செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Railwayworkers #Railwayworkersalary

    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயில் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    ரெயில்வே மண்டலங்களாகவும் கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

    ரெயில்வே ஊழியர்களின் சம்பள பட்டியலை ஆய்வு செய்தபோது அவற்றில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணிக்கே வராத ஊழியர்களுக்கு சம்பளமும், அலவன்ஸ்களும் வழங்கியதாக முறைகேடு நடந்துள்ளது.

    வடக்கு ரெயில்வேயின் டெல்லி டிவி‌ஷனில் இந்த சம்பள மோசடி கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வந்தது.


    இதை மேலும் ஆய்வு செய்தபோது கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.1½ கோடிக்கு அலவன்ஸ் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இந்த காலகட்டத்தில் 13,000 ஊழியர்கள் விடுமுறையில் இருந்தனர். ஆனால் அவர்கள் பணிக்கு வந்ததாக கூறி அவர்கள் பெயர்களில் போலியாக போக்குவரத்து அலவன்ஸ், கூடுதல் பணிநேர அலவன்ஸ் மற்றும் இதர படிகள் என குறிப்பிடப்பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அனைத்து ரெயில்வே மண்டலங்களிலும் ஊழியர்களின் வருகையை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே நிதி கமி‌ஷனர் ஏ.கே.பிரசாத் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் ரெயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை சரிபார்க்க வேன்டும். தற்காலிக ஊழியர்கள், நேரடி தேர்வாளர்கள், ரெயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வானவர்கள் என அனைத்து ஊழியர்களின் பதிவேட்டையும் சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Railwayworkers #Railwayworkersalary

    ×